இலங்கை பிரதான செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றமை தொடர்பாக 7 பிரிவினைவாதத் தலை வர்கள் கைது:-


காஷ்மீரில் கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் பணம் பெற்றமை தொடர்பாக 7 பிரிவினைவாதத் தலை வர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிர வாத அமைப்பைச் சேர்ந்த புர்ஹான்வானி கடந்த ஆண்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் கலவரம் வெடித்தது.

கலவரத்தை தூண்ட பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் பெருந்தொகை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்றையதினம் 7 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவர்களை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *