இலங்கை பிரதான செய்திகள்

நெருக்கடியான தருணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் போராட்டம் நடத்துகின்றது – பிரதமர்:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

நெருக்கடியான தருணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கம் போராட்டம் நடத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இவ்வாறு போராட்டம் நடத்துவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஊடகங்களும் தங்களுக்கு இடையிலான போட்டியை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அது நாட்டை பல்வேறு வழிகளில் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *