இலங்கை பிரதான செய்திகள்

மயூரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபையில் சுழற்சி முறையில் வழங்கப்பட்ட ஆசனத்தை பெற்ற செந்தில்நாதன் மயூரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து சபையில் இருந்து வெளியேறி சென்றார்.

வடமாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்ற போனஸ் ஆசனத்தை சுழற்சி முறையில் கட்சிகளுக்கு வழங்கி , உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு வந்தார்கள்.

அந்த வகையில் மூன்றாவது உறுப்பினராக ரெலோவினை சேர்ந்த செந்தில்நாதன் மயூரன் என்பவர் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்டு இருந்தார்.

அவருடைய பதவிக்காலம் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்ததை அடுத்து சபையில் இருந்து வெளியேறினார்.

அதன் போது நான் இன்றுடன் சபையில் இருந்து வெளியேறினாலும் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *