இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டங்கள் தொடர்கின்றது

upcountry

ஆயிரம் ரூபா சம்பளம், வருடத்தில் 300 நாட்கள் வேலை, நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்  போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.  800ற்கும் மேற்பட்ட அக்கரபத்தனை – பெல்மோரல், கிரன்லி, கிலஸ்டல் ஆகிய தோட்ட தொழிலாளர்கள் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பேரணியாக தொழிற்சாலை வரை சென்ற தொழிலாளர்கள் அங்கு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதுடன் உருவ பொம்மைகளை எரித்தும், டயர்களை எரித்தும்,; தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *