இலங்கை பிரதான செய்திகள்

முல்லைத்தீவு கோட்டைக் கட்டியகுளம் பாடசாயைில் ஆசிரியர் பற்றாக்குறை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

முல்லைத்தீவு துணுக்காய் கோட்டைக்கட்டியகுளம் அ.த.க பாடசாலையில் தமிழ் உட்பட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பப் பிரிவு வகுப்புகளிலேயே கூடுதல் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையினைத் தீர்ப்பதற்கு துணுக்காய் கல்வி வலயம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் படியும் இப்பாடசாலையினை நம்பியே மாணவர்கள் உள்ளனர் எனவும் இப்பாடசாலையில் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் பதினைந்து கிலோமீற்றர் தூரத்தில் மல்லாவி மத்திய கல்லூரிக்கும் பத்து கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள அக்கராயன் மகா வித்தியாலயத்திற்கும் மாணவர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் குறிப்பிடும் பெற்றோா்கள்

ஆண்டு 1 தொடக்கம் உயர்தர கலைப்பிரிவையும் உள்ளடக்கி இயங்குகின்ற இப்பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *