இந்தியா பிரதான செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி அபுதுஜனா சுட்டுக்கொலை என அறிவிக்கப்பட்டுள்ளது:-

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி அபுதுஜனா சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்களையடுத்து தீவிரவாதிகள் பதுங்கியுள்ள கட்டிடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அனைவரையும் சரணடையுமாறு எச்சரித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர் எனவும் இதனையடுத்து தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 27 வயதான அபு துஜனா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *