இலங்கை பிரதான செய்திகள்

தில்ருக்ஸி தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றார்

thirukshi
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க தொடர்ந்தும் தமது பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தில்ருக்ஸி அண்மையில் தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகம் ஏற்றுக் கொண்டதாக முன்னதாக தகவல் வெளியிடப்பட்டிருந்த போதும்; தில்ருக்ஸியின் பதவி விலகல் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பினையும் விடுக்கவில்லை.

இந்த நிலையில் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்க நேற்றைய தினமும் அலுவலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. அரச நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் அதிகாரியொருவர் பதவி விலகுவதாக அறிவித்து அந்த பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் அவர் தொடர்ந்தும் பணியில் இருப்பது வழமையானது ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *