உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு2 – பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த முயற்சித்த   தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று மஸ்கெட்டியர்ஸ் ( Three Musketeers   )என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட இந்தத் தீவிரவாதிகளே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு   தீவிரவாதிகளுக்கு மேற்படி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  நவீட் அலி,கொபாய்ப் குசைன், மொமிபுர் ரஹ்மான் மற்றும் தாகிர் அஸிஸ்      ஆகியோருக்கே  இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2016ம் அண்டு ஓகஸ்ட் மாதம் பகுதியளவில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஜஹாதிய கொள்கைகளைப் பின்பற்றி வரும் இந்த நபர்கள், பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள்   மிகவும் ஆபத்தானவர்கள் எனவும் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய தாக்குதல்களை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட மூவருக்கு நாளை தண்டனை

Aug 2, 2017 @ 13:42


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மூன்று மஸ்கெட்டியர்ஸ் என தங்களை அழைத்துக்கொண்ட மூன்று நபர்கள் பிரித்தானியாவில் பொலிஸ் மற்றும் இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டனர் என்பதை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

நவீட் அலி,கொபாய்ப் குசைன்,மொமிபுர் ரஹ்மான் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் நாளை வியாழக்கிழமை அவர்களிற்காக தண்டனையை வழங்கவுள்ளது,

கடந்த வருடம் இவர்கள் இரகசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் இன்று அவர்கள் குற்றவாளிகள் என மன்று அறிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகளினால் கவரப்பட்டு இவர்கள் பிரித்தானியாவில்  தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய தாக்குதல்களை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர்கள் மூவரும் இதற்கு முன்னரும் பயங்கரவாத நடவடிக்கைகளிற்காக தண்டனையை அனுபவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2011 இல் இவர்கள் அல்ஹைதா அமைப்புடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்காக பாக்கிஸ்தான் சென்றுவிட்டு திரும்பியவேளை இங்கிலாந்தில் விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

முதலில் இவர்கள் அல்ஹைதாவினால் ஈர்க்கப்பட்டிருந்தனர் பின்னர் இவர்கள் ஐஎஸ் அமைப்பை பின்பற்ற தொடங்கியிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *