இந்தியா பிரதான செய்திகள்

ஜெ. துறைகளை ஏற்ற பின்னர் ஓபிஎஸ் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்:-

ops
முதல்வர் ஜெயலலிதா வசம் இருந்த அமைச்துசு றைகளை ஏற்ற பின்னர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் காவிரி விவகாரம், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர்
ஓ. பன்னீர்செல்வத்திடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் துறைகள் தொடர்பான கோப்புகளை பன்னீர்செல்வம் பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில்
ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் காவிரி பிரச்சனை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்ற பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *