உலகம் பிரதான செய்திகள்

டொமினிக்கா தீவு மற்றும் ஜாவா கடற்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

earthquavk
கரிபியன் கடற்பகுதியில் அமைந்துள்ள டொமினிக்கா தீவு மற்றும் ஜாவா கடற்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டொமினிக்கா தீவின் தலைநகரான ரோஸியாவில் இருந்து மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் கடலின் அடிப்பகுதியில் சுமார் 148 கிலோமீட்டர் ஆழத்தில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுக்கோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான ஜாவா கடற்பகுதியிலும்  இன்று   6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்  இவ்விரு நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்பதுடன்  சேதங்கள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவுமில்லை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *