இலங்கை பிரதான செய்திகள்

‘புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தலைநிமிர்ந்து வாழ வேண்டும்’ – சம்பந்தன்:-

“நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு, புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் புதிய அரசமைப்பை உருவாக்கி, நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்” என, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழில் நடாத்தும் 13ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு, யாழ். நகரிலுள்ள டில்கோ விருந்தினர் விடுதியில் நேற்று (06) நடைபெற்றது. இதன்போது    தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“எமது மக்களில் 50 சதவீதமான மக்கள், இன்றைக்கு இந்த நாட்டில் வாழவில்லை. ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள், உலகத்தில் வெவ்வேறு நாடுகளில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கலவரங்கள் காரணமாகவும், தாக்கப்பட்டதன் காரணமாகவும் அந்த மக்கள் சொந்த வதிவிடங்களில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருந்ததது. இதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று  வாழ்ந்து வருகின்றனர்.

“இவ்வாறானதொரு சூழலில் தற்போது இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் செல்வதற்கு முயன்று கொண்டிருக்கிறோம். அதாவது நாட்டில் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாக நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு வெற்றிபெற வேண்டும். அதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது.

“தமிழன் என்ற வகையில் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து சுயநிர்ணய உரிமையுடன் கௌரவத்துவத்துடன் சமஅந்தஸ்துடன், இந்த நாட்டில் வாழக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அத்தகைய நிலைமையை அடையக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் கடமை, எங்கள் எல்லலோருக்கும் இருக்கிறது.

“நாங்கள் எல்லோரும் தமிழர்கள். நாங்கள் அநீதியாக எதனையும் கேட்கக் கூடாது. ஆனால் நீதியாக, நீதியின் அடிப்படையில் உரிமையின் அடிப்படையில் பிறப்புரிமையை நாங்கள் பெற வேண்டும். அதைப் பெறுவதற்கு நீங்கள் எல்லோரும் உதவ வேண்டும்” என்றார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

 • சமீப காலங்களில் விரக்தி அடைந்த சம்பந்தர் நம்பிக்கை இழந்து பேசும் விஷயங்களும் வேண்டுகோள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. ஆட்சி மாற்றம்
  2. புதிய பாதை
  3. அரசமைப்பு

  4. சமத்துவம்
  5. சமாதானம்
  6. சமஅந்தஸ்து
  7. சுயகௌரவம்
  8. தலை நிமிர்ந்தல்
  9. சுயநிர்ணய உரிமை
  10. நிம்மதியான வாழ்வு

  11. வெற்றிபெற வேண்டும்
  12. எல்லோருக்கும் பங்கு இருக்கிறது
  13. நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
  14. கடமை, எங்கள் எல்லலோருக்கும் இருக்கிறது.

  15. நீதியாக,
  16. நீதியின் அடிப்படையில்
  17. உரிமையின் அடிப்படையில்
  18. அநீதியாக எதனையும் கேட்காமல்
  19. பிறப்புரிமையை நாங்கள் பெற வேண்டும்.
  20. அதைப் பெறுவதற்கு நீங்கள் எல்லோரும் உதவ வேண்டும்.

  தாமதமாக இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எல்லா உறுப்பினர்களுடன் இணைந்து சம்பந்தர் குழுப்பணியாற்றுவார? உதாரணமாக அவர் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கால அட்டவணையை உருவாக்கும் முயற்சிகளை சம்பந்தர் இப்போதாவது எடுப்பாரா?