இந்தியா பிரதான செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பங்களாதேஸ் தீவிரவாதி ஒருவர் கைது:-


உத்தரபிரதேசத்தில் பங்களாதேஸ் தீவிரவாதி ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்சருல்லா பங்களா ரீம் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இவரை உத்தரபிரதேச தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த ஒரு மாதமாக குடேசரா பகுதியில் வசித்து வந்தார் எனவும் இ கடந்த 2011ம் ஆண்டு முதல் ஏனைய இடங்களில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர் போலி அடையாளத்தில் ஆதார் அட்டை மற்றும் கடவுச்சீட்டு பெற்று பங்களாதேஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் பாதுகாப்பாக தங்கி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு வசதியாக, அவர்களுக்கு போலி அடையாள ஆவணங்கள் பெறுவதற்கு தொடர்ந்து உதவி புரிந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாவின் அமைப்பு அல் காய்தா தீவிரவாத அமைப்பால் உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்ட அமைப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *