இந்தியா பிரதான செய்திகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் ராஜ்யசபா தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது:-

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் ராஜ்யசபா தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. 182 பேர் கொண்ட குஜராத் சட்டசபை உறுப்பினர்களில் 176 பேர் 3 ராஜ்ய சபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாக்களித்து வருகின்றனர். பாஜக சார்பில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ராஜ்புட் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அகமது படேலும் போட்டியிடுகின்றனர்.

3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால் குஜராத் அரசியலில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில் ; அமித்ஷா, ஸ்மிரிதி இரானி, அகமது பட்டேல் ஆகிய மூவரும் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *