இலங்கை பிரதான செய்திகள் பெண்கள்

யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர்

 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர் என Thomson Reuters  அறிக்கை வெளியிட்டுள்ளது.

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வடக்கைச் சேர்ந்த பெண் குடும்பத் தலைவிகள் பலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் எனவும் 2011ம் ஆண்டை விடவும் தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் வீட்டுப் பணிப் பெண்களாக வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது மிகவும் அரிதாகவே காணப்பட்டது எனவும் எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், குடும்ப சுமையை ஈடு செய்ய முடியாத பெண் குடும்பத் தலைவிகள் இவ்வாறு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *