இந்தியா பிரதான செய்திகள்

காஷ்மீரில் இந்திய ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்


இந்திய எல்லைக்குட்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெல்லட் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில்  16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து, அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில்   மூன்று  தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அப்போது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் ராணுவத்தினர் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து ராணுவத்தினர்   பெல்லெட் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கிகளால் அவர்களை  நோக்கி   சுட்டதாகவும் அதில் காயமடைந்த 16 வயது சிறுவன் உயிரிழந்ததாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *