விளையாட்டு

கனேடிய இளம் வீரரிடம் ரபால் நடால் அதிர்ச்சி தோல்வி குளோபல் தமிழ்pச் செய்தியாளர்

 
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டென்னிஸ் உலக ஜாம்பவான்களில் ஒருவரான ஸ்பெய்னின் ரபால் நடால், கனேடிய இளம் வீரர் ஓருவரிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளார்.
கனடாவின் இளம் வீரர் டெனிஸ் ஷாபலோவ் ( Denis Shapovalov )  ரபால் நடாலை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார்.
ஒன்டாரியோவின் ரிச்மன்ட் ஹில்லைச் சேர்ந்த டெனிஸ் ஷாபலோவவுக்கு   பதினெட்டு வயது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ரொஜர் கிண்ணப் போட்டியில் நடாலை 3-6 6-4 மற்றும் 7-6 என்ற செற் கணக்கில டெனிஸ் ஷாபலோவ்   வீழ்த்தியுள்ளார்.

கனடாவின் மொன்டரியலில் நடைபெற்ற ரொஜர் கிண்ண மூன்றாம் சுற்றுப் போட்டியொன்றில்  டெனிஸ் ஷாபலோவ்   உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னணி இடங்களை வகித்து வரும் நடாலை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *