உலகம் பிரதான செய்திகள்

ஹொங்கொங் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர் கடத்தி தாக்கப்பட்டுள்ளார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹொங்கொங் ஜனநாயக உரிமை செயற்பாட்டாளர் கடத்தி தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக உரிமை செயற்பட்டாளரான  ஹவாட் லாம்ரே (Howard Lam ) என்பவரே  இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
சீன அதிகாரிகள் தம்மை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியதாக ஜனநாயக உரிமை செயற்பட்டாளர் ஹவாட் லாம்ரே தெரிவித்துள்ளார்.
நோபள் சமாதான பரிசு வென்ற லியு ஜியாபோ ( Liu Xiaobo   ) உடன் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தி இவ்வாறு தாக்கப்பட்டதாகத் அவர் தெரிவித்துள்ளார்.

லியு ஜியாபோவுடன் தொடர்பு பேணக்கூடாது என சீன அதிகாரிகள் தம்மை கடுமையாக எச்சரித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசாங்கத்தை நேசிக்காவிட்டால் இவ்வாறு சித்திரவதைகளை அனுபவிக்க நேரிடும் என தமக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *