இலங்கை பிரதான செய்திகள்

பூநகரியில் நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

பூநகரியில் பிரதேச செயலக பிரிவில் நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவை இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இன்று காலை ஆரம்பமான நிலமெஹர ஜனாதிபதி மக்கள் சேவையில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒழுங்குப்படுத்தலில் இந் நடமாடும் சேவை நடைப்பெற்று வருகிறது.

இந் நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு இறப்பு பதிவுகளை், விவாக பதிவுகள், தேசிய அடையாள அட்டைப் பதிவுகள், சாரதி அனுமதி பத்திரம், முதியோா் அட்டை, காணி, சிறுதொழில் முயற்சி தொடர்பான அறிவுறுத்தல்கள், கடவுச் சீட்டு, வங்கிச்சேவைகள், எனபல சேவைகள் இடம்பெற்றுள்ளது.

அமைச்சுகளின் திணைக்கள அதிகாரிகள் அலுவலர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்கவுள்ளனா்..
இன்றைய பூநகரி நடமாடும் சேவையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மற்றும் மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரச அதிபா் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலா் கிருஸ்னேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *