இலங்கை பிரதான செய்திகள்

“புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம்.”

ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் – விஜயகலா மகேஸ்வரன்:-  குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நில மெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனை தெரிவித்துள்ளார்.. அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்

“யுத்தத்தை எப்படி இவா்கள் முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும் சிறுவா்கள் முதியோர்களை கொன்றுதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனா். இ்பபடியானவா்கள் மீண்டும் ஒரு அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு சர்வதேசம் அனுமதிக்க கூடாது. எனவே எங்களுடைய நல்லாட்சி அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்ல வேண்டும்.” எனத் தெரிவித்த அவா்

“எங்களுடைய சொந்த கால்களில் வாழந்த எங்களைக் கடந்த அரசாங்கம் கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனிவரும் காலங்களில் இப்படியான அரசாங்கத்திலே யார் யார் அங்கம் வகித்தார்களோ, யார் யார் காட்டிக்கொடுத்தார்களோ,யார் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதுணையாக நின்றார்களோ அவர்களை இனம் காணுங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள படுகொலை செய்திருக்கின்றீர்கள் அவா்களை அங்கவீனர்கள் ஆக்கியிருக்கின்றீர்கள், எங்களுடைய இளம் வயது பெண்களை விதவைகள் ஆக்கியிருக்கின்றீர்கள்.எனவே இவ்வாறனவா்களுக்கு நாங்கள் எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கொண்டு செல்லப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத சில தீய சக்திகள் வாள் வெட்டு, கிறிஸ்பூதம், பள்ளிகளை அடித்தல், ஆலயங்களில் சிலைகளை கொண்டு செல்லுதல் இ்பபடியான எத்தனையோ அட்டூழியங்களை அசெய்து வருகின்றார்கள்.

எனவே இதிலிருந்து நாங்க்ள விடுதலைப்பெற வேண்டும் இதற்காகதான் நாங்கள் இந்த நல்லாட்சி அரசை ஏற்படுத்தியிருக்கின்றோம்.2015 இற்கு பின்னர் எத்தனையோ காணிகளை இராணுவத்தினடம் இருந்து மீட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். எனவே இப்படியான நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதியான அரசாங்கத்தை தெரிவுசெய்ய வேண்டும், உறுதுியானவா்களை தெரிவு செய்ய வேண்டும். என்குறிப்பிட் அவா் தற்போது வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் செல் தாக்குதல் பங்கா் வாழ்க்கை, காணாமல் போதல்,வெள்ளைவான் கடத்தல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் கல்வி முன்னேற்றத்தில் இருந்தது. ஆனால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னா் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

2 Comments

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

  • அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். யாரையும் கொல்லக்கூடாது. கள்ள அரசு, தோல்வியுற்ற அரசு, அடக்கும் அரசு மற்றும் அட்டூழியங்களை செய்யும் அரசு ஒன்று உருவாக ஒருவரும் ஆதரிக்கக்கூடாது, குறிப்பாக தமிழர்கள்.

  • புலிகளை இனம் கண்டு கொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க்க மாட்டோம், வேலுச்சி நாச்சியாருக்கு இந்த அதிகாரத்தை தந்தது யார்? அல்லது தமிழ் மக்கள் உம்முடன் கோரிக்கை வைத்தனரா ? அல்லது புலிகளை கொலை செய்வதற்க்கு சிங்கள கொலைகார கூட்டத்திடம் மண்டியிட்டு கோரிக்கைவை வைப்பதின் மர்மம் என்ன , உமது கணவனை சிங்கள கொலைகார கூட்டம் கொலை செய்ததை சரியென்று ஏற்றுக்கொள்கின்றீரா, கொலை செய்த கொலைகாரன் பங்கு பற்றிய நிகழ்வுகளில் கடந்தகாலங்களில் மேடைக்கு மேடை முண்டியடித்துக் கொண்டு அருகில் உட்காருவதற்க்கு போட்டி போட்ட மர்மம் என்னவென்று சொல்லமுடியுமா , புலிகளின் தியாகம் எல்லாம் எல்லாம் சிங்களத்தின் எலும்புத்துண்டுக்கு முன்னால் நகைப்புக்கு உரிய பொருளாகிவிட்டதோ , புலியாக இருக்கலாம் அல்லது நரியாக இருக்கலாம் தமிழனை கொலை செய்ய சிங்கள கொலை கார கூட்டத்திற்க்கு அதிகாரம் இல்லையென்பதை மறந்துவிடவேண்டாம் , தமிழ் மக்களை இனப்படு கொலை செய்த சிங்கள காடையர்களை வீரர்கள் என்றும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் மைத்திரியும் இனப்படு கொலையாளிதான் இதில் மஹிந்தன் மைத்திரியென்ற வேறுபாடு கிடையாது , தமிழனையும் தமிழ் மண்ணையும் தமிழன் தான் ஆட்சி செய்யவேண்டும் , அற்ப சொற்ப சலுகைக்காக சிங்களத்திடம் மனிடியிடுகின்ற கூட்டம் எல்லாம் தமிழர்களுக்கு தலைவன் தலைவி ஆகிவிடமுடியாது,