உலகம் பிரதான செய்திகள்

மொசூல் நகரிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதத் தலைவர்கள் வெளியேற்றம்

is
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஈராக்கின் மொசூல் நகரிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதத் தலைவர்கள் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கிய அரச படையினர் நகரின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு முன்நகர்ந்து செல்கின்ற நிலையில் தீவிரவாதத் தலைவர்கள் இவ்வாறு தப்பிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கிய படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மொசூல் நகர் மீது ஈராக்கிய படையினர் வடக்கிலிருந்து முன்நகர்ந்து வருவதுடன், கிழக்கு பகுதியிலிருந்து அரச ஆதரவு படையினரான குர்திஸ்கள் முன்நகர்ந்து வருவதாகவும் இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் பி;ன்னடைவுகளை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு முதல் மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள நிலையில் தற்போது மொசூல் நகரின் மீது தீவிரவாதிகள் கொண்டிருந்த பிடி நழுவிச் செல்வதனை கண்காணிக்க முடிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாதிகள் மனித கேடயங்களாக மக்களை பயன்படுத்தக் கூடும் எனவும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *