இந்தியா பிரதான செய்திகள்

இந்தியா மியான்மாரிடையே 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

ank

பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத் துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் மியான்மரும் முடிவு செய் துள்ளன. கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் மியான்மர் அரச ஆலோசகரும் வெளியுறவு அமைச்சருமான ஆங் சான் சூகி தனது 3 நாள் சுற்றுப்பயணத்தின் பயணத்தின் இறுதி நாளான நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து மோடி மற்றும் சூகி தலைமையில் இரு நாட்டுப் பிரதிநிதிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இந்தப் பேச்சு வார்த்தையில், பாதுகாப்பு, வர்த்தகம், வேளாண்மை,  உள்ளிட்ட  துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலும் உறவுகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.  மேலும் மின்சாரம், வங்கி மற்றும் காப்புறுதித் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் 3 உடன்பாடுகளிலும்; கையெழுத்திட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *