இந்தியா பிரதான செய்திகள்

76 வயதில், 70 அரச பாடசாலை மாணவர்களை, தத்தெடுத்தார் சமூக ஆர்வலர்:-

இந்திய சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு 76 வயதான சமூக ஆர்வலர் ஒருவர் 70 அரச பாடசாலை மாணவர்களை தத்தெடுத்துள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த சமூக ஆர்வலரான பர்வதரெட்டி பார்த்தசாரதி நாயுடு கடந்த 40 ஆண்டுகளாக ஏழை பாடசாலை மாணவ, மாணவியருக்கு உறுதுணையாக இருந்து வருவதுடன் பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள், பாடசாலை சீருடைகள், மற்றும் உணவும் அளித்து அவர்கள் கல்வி கற்க மிகவும் உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில், பார்த்தசாரதி நாயுடு, சுதந்திர தினவிழாவினையொட்டி, சித்தூரில் உள்ள ஒரு நகராட்சி பாடசாலையில  படிக்கும் 70 மாணவ, மாணவியரை தத்தெடுத்துள்ளார். அவர்களுக்கு தேவையான சீருடைகள், பாட புத்தகங்கள், புத்தகங்கள், போன்றவற்றுடன் இலவச உணவும் வழங்க முன்வந்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *