இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்

xxxxx1
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்  கிளிநொச்சி

கிளிநொச்சி , பரந்தன் கரடிப்போக்கு டிப்போ சந்தி  ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்று இன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சிவில் அமையம் ஆகியன இணைந்து இந்த கையெழுத்துப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.

img_7595

இன்று  காலை  20ம் திகதி 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இப் போராட்டம்  கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தி கிளிநொச்சி நகரம் பரந்தன் சந்தி   ஆகிய இடங்களில்     நடைபெற்றுக் கொண்டுள்ளதுடன்  அரசியல்கைதிகள் மற்றும் காணாமல்  ஆக்கப்பட்டவர்ளுக்கு  நீதிகோரி  நடைபெறுகின்ற கையெழுத்துப் போராட்ட  கையெழுத்துக்கள் அடங்கிய மனு ஜனாதிபதி அவர்களுக்கு  அனுப்ப்படவுள்ளதுடன் குறித்த போராட்டத்திற்கு கிளிநொச்சி மக்கள் தமது பூரண ஆதரவை  வழங்கிக் கொண்டிருப்பதாக  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்  .

xxxxx3xxxxx2

xxxxx4 xxxxx5 xxxxx6

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *