இலங்கை பிரதான செய்திகள்

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஸ:-

சர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிற்கு எதிராக மிகக் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கல்கிஸ்சை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர பொலிஸ் திணைக்களத்தில் வைத்து இரண்டு பணியாளர்களை சேர்ட் கொலர்களை பிடித்துதாக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியுள்ளதுஇது தொடர்பில் அவருக்கு எதிராக சிறியதொரு சட்ட நடவடிக்கையும்எடுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

இது போன்ற செயல்களை கூட்டு எதிரணி  செய்திருந்தால் உடனே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.அண்மையில் ஒரு பெண் சிறுபிள்ளை ஒன்றை தாக்கினார் என்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.குறித்தபெண்ணுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமாக இருப்பின் ஏன் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது?

குறித்த ஊழியர்கள் இருவரும் சட்ட ரீதியாக குற்றம் புரிந்திருப்பின் அவர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதனைவிடுத்து பொலிஸ் மா அதிபர் சட்டத்தை கையில் எடுத்தமையானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலல்ல.இவர் பொலிஸ்மா அதிபர் என்ற பதவிக்கான பண்பு ரீதியான தகுதியையும் இதனூடாக இழந்துள்ளார்.

இதே விடயம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் இதனை நாமே செய்வித்தது போன்று விமர்சித்திருப்பார்கள்எமது ஆட்சியில்இவ்வாறான விடயங்களுக்கு நாம் இடம்கொடுக்காமல் மிகக் கடுமையாக இருந்ததால் எம்மை சர்வதிகாரிகளாகவிமர்சித்தார்கள்.தேவையில்லாமல் அப்பாவிகளிடத்தில் அதிகார பலத்தை காட்டுவதே சர்வதிகாரமாகும்.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் இவ்வரசுக்கு இருப்பதாக நான் கருதவில்லை.இச் செயலினூடாக பொலிஸ் மாஅதிபர் தனக்கு கீழ் உள்ள ஏனைய அதிகாரிகளுக்கும் தவறான முன்மாதிரியை வழங்கியுள்ளார். 

இவருக்கு வழங்கப்படும் தண்டனை ஏனையோருக்கு பாடமாக அமைய வேண்டும்எனவேபொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர குறித்தஇரு பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்பதோடு பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து அகற்றப்படல் வேண்டும்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *