இலங்கை பிரதான செய்திகள்

சர்வஜன வாக்கெடுப்பிற்கு தேர்தல் ஆணைக்குழு தயார்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படுமானால் அதற்கு தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டு ஆறு வாரங்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சாசன திருத்தங்கள் அல்லது அது தெடார்பான காரணிகளுக்காக அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *