உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு 2 – சிங்கப்பூர் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான அமெரிக்க கப்பலின் மாலுமிகளின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சிங்கப்பூர் கடற்பகுதியில் நேற்று அமெரிக்க நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் மக்கெய்ன்  விபத்திற்குள்ளான வேளை காணமற்போன மாலுமிகளின்  சில  உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நாசகாரி கப்பலின் உட்பகுதியில் உடற்பாகங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது கப்பலின் சேதமடைந்த பகுதிக்குள் சில உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன எனினும் காணமல்போன 10 மாலுமிகளையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மலேசியா அதிகாரிகளும் தாங்கள் மாலுமிகளின் உடல்கள் என சந்தேகிக்கப்படும் சிலவற்றை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எத்தனை உடல்கள் மீட்கப்பட்டன போன்ற விபரங்களை அவர் வெளியிடவில்லை

அமெரிக்கா ஆசிய பகுதியில் கடந்த ஓரு வருடகாலப்பகுதியில் சந்தித்துள்ள நான்காவது விபத்தின் காரணமாக  அதன் நடவடிக்கை திறன் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதேவேளை அமெரிக்க கடற்படை கலங்களின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வுசெய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க போர்க்கப்பல்   விபத்து -10 பேரைக் காணவில்லை

Aug 21, 2017 @ 04:1

அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று  சரக்கு கப்பல் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட  மோதிய விபத்தில் 10 பேர்  காணாமல் போயுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோன் மெக்கெயின் என்ற குறித்த போhக்கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த  வேளை சரக்கு கப்பலுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  போர்க்கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்டதாகவும் அதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 5 இந்த விபத்தில் பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள்   மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *