இலங்கை பிரதான செய்திகள்

மல்லாகம் மகா வித்தியாலய பழையமாணவர் சங்கத்தின் “எழுச்சி -2017”

 மல்லாகம் மகா வித்தியாலய பழையமாணவர் சங்கத்தினரால் “எழுச்சி -2017” என்ற முதலாவது மாபெரும் பழையமாணவர்களின் ஒன்றுகூடல் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது பாடசாலையில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த நிகழ்விற்க்கு கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனா் இந்நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது.

இந் நிகழ்வினை வினைத்திறனாக்கும் முகமாக அனைத்து மல்லாகம் மகா வித்தியாலய பழையமாணவர்களுக்கும் , எமது பாடசாலையில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்குடன் ஊடகங்கள் வாயிலாக இத்தகவலினை பிரசுரித்து எமது முதலாவது முயற்சிக்கு ஆதரவு தருமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

எமது பாடசாலையில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் தரவு எம்மிடம் போதிய அளவு இல்லை. ஆகவே பாடசாலையில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் தொடர்பு இலக்கம் உடையவர்கள், பழைய மாணவர்கள் எமது வேண்டுகோளை ஏற்று எம்முடன் தொடர்பினை ஏற்படுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக தகவல் மற்றும் தொடர்பிற்க்கு ‎‎‎0778996137. ”அனைவரும் ஒன்றிணைவீர்.எம் பாடசாலை தாயை புதுப்பொலிவு பெற செய்வீர்” “எழுச்சி-2017” மல்லாகம் மகா வித்தியாலய பழையமாணவ சங்கத்தின்ரால் “எழுச்சி -2017” என்ற முதலாவது மாபெரும் பழையமாணவர்களின் ஒன்றுகூடல் பாடசாலையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாடசாலை மகாதேவன் மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்நிகழ்வில் உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் சகல பழையமாணவர்களையும் அணிதிரளுமாறு விழா எற்பாட்டுக்குழு கோருகின்றனர்.

பழையமாணவர்கள் தமது குடும்ப சமேதர்களாக இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது நினைவுகளை மீட்டும், அதேவேளை பரஸ்பரம் பழைய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளவும், தமது ஆசிரியர்களை சந்திக்கவும், பாடசாலையின் வளர்ச்சிக்கு தமது பங்களிப்பினை வழங்கவும் முடியும். நண்பர்களே இந்நிகழ்வு சம்பந்தமாக உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், அத்துடன் நீங்கள் சார்ந்த ஊடகங்கள் வாயிலாக முடியுமானவரை இதுபற்றி தெரியப்படுத்தவும். பதிவுகளையும் முன்கூட்டியே செய்யுங்கள் அதன்மூலம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய எமக்கு வாய்ப்பு கிட்டும் வாருங்கள் அணி சேருங்கள்.

ஒன்றுகூடலின் மூலம் கல்லூரிக்கு உதவி செய்யும் முகமாக 500 ரூபா சீட்டு ஒன்றினை பெற்று வரவினை உறுதிப்படுத்தவேண்டும். நுழைவுச் சீட்டுக்களை பழைய மாணவர் சங்க நிர்வாகசபை உறுப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளமுடியும். ”பழைய மாணவர்களுக்கு (தனி 500/= குடும்பத்தினராக வருவோருக்கு இரு சீட்டுக்கள்) ” முன் பதிவு செய்து கொள்வதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ளலாம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *