உலகம் பிரதான செய்திகள்

பார்சிலோனா தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் பாரிய குண்டுதாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்ததாக நீதிமன்றில் தெரிவிப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்பெயினின் பார்சிலோனாவில் கடந்த வாரம் வாகனத்தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளில் ஓருவர் என சந்தேகிக்கப்படும் நபர்  தாங்கள் பாரிய குண்டுதாக்குதல்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்ததாக இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் இன்று நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தப்பட்டவேளை சந்தேக நபர் இதனை தெரிவித்துள்ளார்.

தங்கள் குழுவினர் பாரிய வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் எனினும் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச்சம்பவம் காரணமாக அது சாத்தியமாகவில்லை எனவும் முகமட் குலி என்ற 21 வயது சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வெடிவிபத்தின் போது ஏற்பட்ட காயங்களுடன் அவர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இன்று நான்கு சந்தேக நபர்களை நீதிபதி விசாரணை செய்துள்ளார்.

முகமட் குலி ஸ்பெயினின் மெலிலா பகுதியை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவரை காவல்துறையினர் மருத்துவமனையில் வைத்து கைதுசெய்ததாக குறிப்பிட்டுள்ளனர்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *