இந்தியா பிரதான செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு


உத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் 70 குழந்தைகள் ஒக்சிசன் பற்றாக்குறையால் உயிரிழந்த    சம்பவம்   தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட உத்தரபிரதேச அரசாங்கம்  மருத்துவமனை முதல்வர் மிஸ்ரா மற்றும்      கோரக்பூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த குழந்தைகள் சிறப்பு மருத்துவரான கபீல் கான் என்பவரையும் வேலைநிறுத்தம்  செய்திருந்தது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை செயலாளர் ராஜீவ் குமார் தலைமையிலான உயர்மட்ட குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில்,  70 குழந்தைகள் உயிரிழந்த  சம்பவம் தொடர்பாக கோராக்பூர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் மிஸ்ராஉள்ளிட்ட 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.  மேலும், உரிய நேரத்தில் ஒக்சிசன் சிலிண்டருக்கான பணம் செலுத்தாத மருத்துவக் கல்விக்கான கூடுதல் முதன்மை செயலாளர் அனிதா பாட்நகரை நீக்கவும் முதலமைச்சர்   உத்தரவிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *