இலங்கை பிரதான செய்திகள்

யாழ். பல்கலை மாணவர்களின் மீதான துப்பாக்கிப் சூடு – 5 காவல்துறையினருக்கும் தொடர் விளக்கமறியல்:-

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மீது துப்பாக்கிப் சூடு மேற்கொண்ட 5 காவல்துறையினரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த  உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்திருந்தனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் கடமையாற்றிய 5 காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *