இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு விடுவது குறித்து தீர்மானிக்கவில்லை – லக்ஸ்மன் கிரியல்ல


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு விடுவது குறித்து தீர்மானிக்கவில்லை என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சில சீன மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு பெற்றுக் கொள்வதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் எனினும் இது குறித்து அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என  குறிப்பிட்டுள்ளார்.

சில தரப்பினர் அரசாங்கம் அதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு விட உள்ளதாக குற்றம் சுமத்தி வருவதாகவும் இதில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   அமெரிக்காவில் கூட சில நெடுஞ்சாலைகள் வேறு நிறுவனங்களினால் முகாமைத்துவம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *