இலங்கை

எனக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது – சுசில் பிரேமஜயந்த


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது என தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவிற்கு போன்று தம்மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் கிடையாது என  குறிப்பிட்டுள்ள அவர் அமைச்சரவையில்  கூட்டுப் பங்களிப்பு பற்றி தமக்கு நன்றாகத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், மக்களுக்காக சில விடயங்களில் குரல் எழுப்ப வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கம் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டு வரும் விமர்சனங்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *