இலங்கை பிரதான செய்திகள்

வரவு செலவுத் திட்ட நிவாரணங்கள் வெறும் வார்த்தைக்கு மட்டுப்படுத்தப்படாது – ரவி

ravi
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வரவு செலவுத் திட்ட நிவாரணங்கள் வெறும் வார்த்தைக்கு மட்டுப்படுத்தப்படாது எனவும் செயற்பாட்டின் மூலம் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுவதற்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை மூன்று தடவைகள் சந்தித்து பேசியதாகவும் இம்முறை வரவு செலவுத்திட்டம் இணக்கப்பாட்டின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட நிவாரணங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *