இந்தியா பிரதான செய்திகள்

புனேயில் பருத்திக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்:-

இந்தியாவின் புனே அருகே தொழிலக வளாகம் ஒன்றிலுள்ள பருத்திக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட  தீ விபத்தின் போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் உட்பட 5 பேர்  உயிரிழந்துள்ளனர்.

திடீரென தீப்பிடித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கடுமையாக போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.fire

விபத்து ஏற்பட்ட சமயத்தில் அதிகளவான  தொழிலாளர்கள்  குறித்த கிடங்கினுள் இருந்ததாகவும்  தீப்பிடித்தவுடன் பலர் வெளியேறிவிட்ட போதும்  4 பெண்கள் உட்பட 5 பேர் வெளியேற முடியாமல் தீயில் அகப்பட்டு  உயிரிழந்ததாகவும் , தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *