இந்தியா பிரதான செய்திகள்

சென்னையிலிருந்து கடத்தப்பட்ட 90 சிறுமிகள் உள்பட 125 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

rescuedசென்னையிலிருந்து புகையிரதம் ஒன்றின் ஊடாக கேரளாவுக்கு கடத்தப்பட்ட 90 சிறுமிகள் உள்பட 125 பேர் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினருக்கு கிடைத்த  ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து  குறித்த புகையிரதத்தினை சோதனையிட்ட காவல்துறையினர்  பயிற்சி முகாம் ஒன்றில் பங்கேற்க செல்வதாக அடையாள அட்டைகளை வைத்திருந்த சிலரிடம் விசாரணை மேற்கொண்ட போது தங்களை கேரளாவில் உள்ள தையல் கம்பெனிக்கு வேலைக்கு அழைத்துச் செல்வதாக  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து அவர்களை அழைத்துச் சென்ற முகவரான 45 வயதான   ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்நாத்மிஸ்ரா என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில்   அவர்ளை இறால் மீன் நிறுவனங்களுக்கு  கொத்தடிமையாக வேலைக்கு அமர்த்துவதற்காக அழைத்துச் சென்றமை தெரிய வந்துள்ளது.   மேலும் இவ்வாறு கடத்தப்பட்ட சிறுமிகளில் 28 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் எனவும்  போலியாக சான்றிதழ் தயாரித்து அவர்களை அழைத்து சென்றமையும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகளை சைல்ட் லைன் என்ற அமைப்பினரின்  உதவியுடன் திருவனந்தபுரத்தில் உள்ள காப்பகத்தில்  காவல்துறையினர் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *