உலகம் பிரதான செய்திகள்

ஹூஸ்டனில் சீரற்ற காலநிலையினால் இரசாயன உற்பத்திசாலையில் தீ விபத்து


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்காவின் ரெக்ஸாஸின்  ஹூஸ்டனில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் இரசாயன உற்பத்திசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் புயல் காற்றினால் பாதிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரில் இந்த இரசாயன உற்பத்திச்சாலை அமைந்துள்ளது.

இந்த உற்பத்திசாலையிலிருந்து புகை வெளியேறுவது பேராபத்தை ஏற்படுத்தக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்திச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள போதிலும், இரசாயனங்கள் வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உற்பத்திசாலையிலிருந்து வெளியேறி வரும் புகையை சுவாசித்த சிலர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்திசாலைக்கு அருகாமையில் தங்கியிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *