இலங்கை பிரதான செய்திகள்

சம்பியா உக்ரையன் நாடுகள் புதிய கடற்படை தளபதிக்கு அழைப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையின் 21 வது கடற்படை தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னாவை தங்களின் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு சம்பியா   மற்றும் உக்ரையன் நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற  இராணுவ பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொண்ட மேற்குறித்த நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு பிரதானிகள்  புதிய கடற்படைத் தளபதியை சந்தித்து இவ்வழைப்பை விடுத்துள்ளனா்.

நேற்று (31 ஓகஸ்ட் 2017) கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளபதி தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னாவைச்  சம்பிய இராணுவத்தின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பால் ஹியோவ சந்தித்த வேளை இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.

இதனையடுத்து இந்தியாவில் உக்ரேனின் தூதரகத்தில் பாதுகாப்பு,  மற்றும் கடற்படை , விமான படை  பொறுப்பதிகாரியான  கேணல் ஓலே {ஹலக் நேற்று கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி தளபதி வைஸ் அட்மிரல் டிராவிஸ் சின்னாவை சந்தித்துள்ளார்

இதன் போது  இலங்கை கடற்படையின் மிக உயர்ந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் மூலம் கடற்படை தளபதிக்கு தனது  வாழ்த்துக்களை தெரிவித்த அவர்,  தனது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *