இலங்கை பிரதான செய்திகள்

வன்னி யுத்தத்திற்கு சரத் பொன்சேகாவே உத்தரவு வழங்கினார் – ஜகத் ஜயசூரிய


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வன்னி யுத்தத்திற் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உத்தரவிட்டார் என முன்னாள் இராணவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.  எதிர்வரும் திங்கட்கிழமை தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வன்னி கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் தாம் படையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய போதிலும் பொறுப்புக்கள் அனைத்தும் தம்மைச் சாராது என அவர் தெரிவித்துள்ளார்.

வன்னிப் படையினருக்கு கட்டளைகளை முன்னாள் இராணுவத் தளபதியே பிறப்பித்தார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *