இலங்கை பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான சித்திரவதையைக் கண்டித்து அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்


மியன்­மாரில் ரோஹிங்கியா முஸ்­லிம்கள் மீது மியன்மார் அரச படை­யினர் மற்றும் பௌத்த தேசி­ய­வாத அமைப்­புக்கள் மேற்­கொண்டு வரு­கின்ற வன்­செ­யல்­களை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வினைப் பெற்­றுக்­கொ­டுக்க ஐக்­கிய நாடுகள் சபை முன்­வர வேண்டும் எனவும்  அத்துடன் கொடூர கொலைத்தாக்குதல்களை நிறுத்தி உடனடியாக ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும் எனவும்  கோரி இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று அட்டாளைச்சேனை கோணாவத்தையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எல்.எம்.வாஹிட், பிரதி சுகாதார அமைச்சின் இணைப்பாளர் போராளி சுபியான் ரமீஸ், வைத்திய கலாநிதி டாக்டர் நக்பர் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக வந்திருந்த பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

ரோஹிங்கியா முஸ்­லிம்கள் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னைகள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் தலை­மை­ய­கத்­துக்கு உட­ன­டி­யாக    அராபிய நாடுகள் கடும் போக்குடனான கட்டளைகளையிட வேண்டும் என்றும் வல்லரசுகள் முஸ்லீம்கள் விடயத்தில் பொடுபோக்காய் இருப்பதனை கண்டிக்கிறோம் என்றும், ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் அல்லது அம்மகளுக்கு பிறநாடுகளில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்றும்  ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோசம் எழுப்பினர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *