இலங்கை பிரதான செய்திகள்

ஊடகவியலாளா் பரமேஸ்வரன் மீது முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் தாக்குதல்!

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன்(55) மீது இன்று  மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின்  மகன்( வெளிநாட்டு  பிரஜை)  மற்றும் மாணிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த கௌரிகாந்தன் ஆகியோரே  தன்  மீது தாக்குதலை மேற்கொண்டதாக பரமேஸ்வரன் யாழ் பொலீஸ் நிலையத்தின் முறைபாடு பதிவு செய்துள்ளாா்.
இது தொடர்பில் ஊடகவியலாளா் பரமேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது. இன்று 03-09-2017 யாழ்ப்பாணம் நூலகத்தில்  மறைந்த  முன்னாள் இலங்கை நாடாளுமன்றத்தி்ன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் 90 வது பிறந்தநாள்  நிகழ்வு இடம்பெற்ற போது, நான் ஒரு துண்டு பிரசுரத்தை கலந்துகொள்ள வந்தவா்களிடம் விநியோகித்திருந்தேன். அதில்  1979 ஆம் ஆண்டு  இலங்கை நாடாளுமன்றத்தில்  பயங்கரவாத தடை்ச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது  அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கம் ஏன் எதிர்க்கவில்லை எனவும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு எதிரானது எனவும்  குறிப்பிட்டிருந்தேன்.
எனவே  இதற்காக என்னை நூலக கேட்போர் கூட்டத்திலிருந்து வெளியே அழைத்து வந்து இருவரும் என் மீது தாக்குதலை மேற்கொண்டனா் எனத் தெரிவித்த அவா் தான் இது தொடா்பில்  யாழ் பொலீஸ் நிலையத்தில் முறைபாடு  செய்துள்ளதாகவும் குறிப்பிட்டாா். எனினும் இது குறித்து அமிர்தலிங்கத்தின் மகன் தரப்போடு தொடர்புகளை ஏற்படுத்த முடியவில்லை. அவர்கள் தரப்பு பதில் கிடைத்தால் பிரசுரிக்கப்படும்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *