இலங்கை பிரதான செய்திகள்

சோபை இழந்து காணப்பட்ட கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கள் கிழமை இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு  ஆரம்ப்பமான  வருடாந்த தேர் திருவிழாவில் இம்முறை கலந்துகொண்ட மக்களின் தொகை மிக மிக குறைவாகவே காணப்பட்டது. கடந்த வருடம் கலந்துகொண்டவா்களில்  மூன்றில் ஒரு பகுதி மக்களே இன்று கலந்துகொண்டதாக ஆலய நிர்வாக சபையை சேர்ந்த ஒருவா் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த பத்து நாள் திருவிழா பூசைகளில் கலந்துகொண்ட மக்களின் தொகை மிக மிக குறைவாக காணப்பட்டதாகவும் அவா்   தெரிவித்தார். கடந்த வருடங்களில் வடம் பிடித்து தேர் இழுப்பதற்கு  மக்கள் கூட்டம்  முண்டியடித்து  நெரிசல்களுக்கு மத்தியில் தங்களது நேற்றிக்கடன்களை   நிறைவேற்றிய போதும் இம் முறை அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் பிரதட்டை நேர்த்தி கடன் செய்பவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக காணப்பட்டதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளியிலிருந்து  தூக்கு  காவடி உள்ளிட்ட காவடிகளின் வருகையும் காணப்படவில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *