இந்தியா பிரதான செய்திகள்

குடியும் கொடுமையும் மகனை கொன்ற தாய்:-


குடிபோதையில் தினமும் தகராறு செய்து கொடுமை படுத்திய மகன் தலையில் கல்லைப்போடு கொலை செய்த தாயார் பொலீஸாரிடம் சரணடைந்தார். சென்னை, திருவேற்காடு, அன்பு நகர் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய சரஸ்வதி என்பவரே 37 வயதுடைய அவரது மகன் செந்திலை கொலை செய்தள்ளார். செந்திலுக்கு இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர்.

செந்திலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு சென்று மனைவி, மூன்று பிள்ளைகள் மற்றும் தாயாரை அடித்து கொடுமை படுத்துவது அவருக்கு வழக்கமாக இருந்துள்ளது. வேலைக்கு போகாததால் வீட்டுச்செலவுக்காக தாயார் சரஸ்வதியும், மனைவி காமாட்சியும் அருகிலுள்ள பிரபல உணவு விடுதி ஒன்றில் பணி புரிந்துவந்தனர். அந்த வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

ஆனாலும் அந்த பணத்தையும் செந்தில் அடித்துப் பறித்துச் சென்று குடித்துவிடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. நேற்று முன் தினம் வழக்கம்போல் போதையில் வந்த செந்தில் மனைவி காமாட்சியையும், மூன்று பிள்ளைகளையும் அடித்துள்ளார். கொடுமை தாங்காமல் மனைவி காமாட்சி பிள்ளைகளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டில் தாயார் சரஸ்வதி மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் குடித்துவிட்டு சென்ற செந்தில் தாயார் சரஸ்வதியிடம் இரவு முழுதும் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் விடியற்காலையில் செந்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது மகனால் பாதிக்கப்பட்ட தாய் சரஸ்வதி செந்தில் தலைமேல் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே செந்தில் மரணமானார். உடனடியாகவே திருவேற்காடு காவல்நிலையத்திற்கு சென்ற சரஸ்வதி தனது மகன் தலைமீது கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது பற்றி கூறி சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பிணமாக கிடந்த செந்தில் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *