இலங்கை பிரதான செய்திகள்

மியன்மார் கொடூரங்களுக்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து ஐ.நாவும் உலக நாடுகளும் வெட்கப்பட வேண்டும்

மியன்மாரில்  நடக்கும் கொடூரங்களுக்கு  நடவடிக்கை  எடுக்காமல்  வேடிக்கை பார்ப்பதை எண்ணி ஐக்கிய நாடுகள் சபையும் உ லக நாடுகளும் வெட்கப்பட வேண்டும்  என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,

மியன்மாரில்  பச்சிளங் குழந்தைகள் கொல்லப்படும் போதும்  கர்ப்பணிப் பெண்கள் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு     கொடூரமாக  கொலைசெய்யப்படுவதையும் பார்த்துக்  கொண்டு இருப்பது கண்முன்னே மனிதாபிமானம் கண்முன்னே  குழிதோண்டி புதைக்கப்படுவதை ரசித்துப  பார்த்துக்கொண்டிருப்பதற்கு சம்மாகும் என  அவர் தெரிவித்துள்ளார்

காத்தான்குடியின்  குப்பைப்  பிரச்சினைக்கு தீர்வாக இயற்கைப் பசளைத்  தயாரிப்பு  நிலையத்தை விஸ்தரிக்கும் செயற்பாட்டை  ஆரம்பித்துவைத்து  உரையாற்றும் போதே  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.

உலகின்  மனித உரிமை மீறல்களை  தட்டிக்கேட்கும் ஐக்கிய நாடுகளும் வல்லரசுகளும் மியன்மார்  விடயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வது  வரலாற்றும் துரோகமாகும் என தெரிவித்த அவர் சமாதானத்திற்கு போராடியவர் என்ற நோபல் பரிசை  வென்ற  ஆங் சா சூகி தற்போது  மியன்மாரின் ஆட்சி பீடத்தில் உள்ள நிலையில்  அவர் காக்கும்மௌனமும்  பல்வேறு  சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *