உலகம் பிரதான செய்திகள்

மனஸ்தீவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படவுள்ளது


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

மனஸ்தீவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகளும் புகலிடக்கோரிக்கையாளர்களும் 70 மில்லியன் டொலர் நஸ்ட ஈட்டை பெறவுள்ளனர்

2012 முதல் 2016 ஆம் ஆண்டு வரை மனஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டிந்தவர்களிற்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம், தடுப்பு முகாம் முகாமையாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டிற்கு விக்டோரியாவின் உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட நஸ்டஈட்டினை பெற்றுக்கொள்வதற்காக 136 புகலிடக்கோரிக்கையாளர்கள் சட்ட ஆலோசனை நிறுவனமொன்றிடம் தங்களை பதிவுசெய்துள்ளனர். நஸ்டஈட்டினை பெற்றுக்கொள்வதற்காக தன்னை பதிவு செய்துகொண்டுள்ள ஈரானை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளரான  நாசர் ஜபார்ஜடே ஓன்றுமில்லாமல் இருப்பதை விட இது பரவாயில்லை  எனவும் தங்களுக்கு என்று எந்த உரிமையும் இல்லை எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தாங்கள் படகுகள் மூலம் வந்தோம் எனவும்    படகுகள் மூலம் வந்தவர்கள் என்பதனால் அவுஸ்திரேலியர்கள் தங்களை வெறுக்கின்றனர் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதால் இந்த பணத்தை ஏற்றுக்கொண்டு  வேறு எங்காவது எதிர்காலத்தை தேடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *