உலகம் பிரதான செய்திகள்

இணைப்பு – 2 கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயலால் 6 பேர் உயிரிழப்பு

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள ‘இர்மா’ புயலின் தாக்கத்தினால் கரீபியன் கடல் பகுதியில் பிரான்ஸ் அரசுக்கு சொந்தமான  செயிண்ட் மார்டின் தீவுகளில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவல்கள் வெளியாகியுள்ளன. கரீபியன் தீவுகளை  தாக்கியுள்ள இர்மா   புயல்   பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் கனமழை பெய்து வருவதுடன்  பலத்த காற்றும்  வீசுவதால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாகவும்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் வீசும் இர்மா புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில்   வீடுகளின் கூரைகள் பறந்துள்ளதுடன்  மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன எனவும்     ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் கடலில் மாபெரும் அலைகள் உண்டாகலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதனயடுத்து    புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த புயலினால் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவுகளில் 6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கரீபியன் தீவுகளில் ‘இர்மா’ புயல் அட்டகாசம்  – புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை

Sep 6, 2017 @ 16:31


கரீபியன் தீவுகளை இர்மா புயல் தாக்கியதைடுத்து, அப்பகுதியில் கனமழை பெய்து வருவதுடன்  பலத்த காற்றும்  வீசுவதால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாகவும்  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் ஏற்பட்ட ஹார்வே புயல் காரணமாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்தித்துள்ள நிலையில் தற்பொழுது  வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில்   உருவாகியுள்ள சக்திவாய்ந்த இர்மா புயல் கரீபியன் நாடுகளை தாக்கத் தொடங்கி உள்ளது.

மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்தில் வீசும் இர்மா புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில்   வீடுகளின் கூரைகள் பறந்துள்ளதுடன்  மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன எனவும்     ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் கடலில் மாபெரும் அலைகள் உண்டாகலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதனயடுத்து    புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்த தீவுகளில் இருந்து  பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுத்த ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து பிரான்ஸ் கவலை வெளியிட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *