இலங்கை பிரதான செய்திகள்

பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது :

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை குறித்து இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதி அளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதாகக் கூறி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அரசாங்கம் தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வதில்லை என கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் யாரும் புதிய அரசியல் சாசனம் ஒன்றை கோரவில்லை எனவும் தற்போதைய அரசியல் சாசனம் நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தற்போது தனது நிறைவேற்று அதிகாரத்தை விட்டுக் கொடுக்க தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *