இலங்கை பிரதான செய்திகள்

ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். ஜனாதிபதி காரியாலயத்தில் நேற்றிரவு கட்சியின் அமைச்சர்கள் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது விலகிக் கொள்வதா என்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கட்சியின் ஏழு உறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக, பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *