இலங்கை பிரதான செய்திகள்

20ஆவது சட்டத்தை வடமாகாணசபை நிராகரித்தது


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
20ஆவது சட்டத்தை நிராகரிக்கின்றோம். அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது தொடர்பில் பின்னர் பரிசீலிப்போம் என வடமாகாண சபை ஏக மனதாக தீர்மானித்துள்ளது. வடமாகாண சபை அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அது தொடர்பில் முதலமைச்சர் தெரிவிக்கையில்,

கடந்த அமர்வில் 20ஆவது சட்டம் தொடர்பில் விவாதித்து அது தொடர்பிலான கரிசணைகளை உள்ளடக்கி, வடமாகாண ஆளூநருக்கு அவைத்தலைவர் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த சட்டவரைவை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேவேளை குறித்த சட்டவரைவில் திருத்தங்கள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் , அது தொடர்பில் பின்னர் பரிசீலிப்போம் என தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *