இலங்கை பிரதான செய்திகள்

திருகோணமலையில் ஈரூடக பயிற்சியில் இராணுவத்தினா்


கடந்த இரண்டு நாட்களாக  இலங்கை இராணுவத்தினா் திருகோணமலையில்  ”நீர் நிலைகள்பயிற்சி VIII -2017′  இனை திருகோணமலை பிரதேசத்தில் அமைந்துள்ள (minkey bridge)குரங்கு பலம் இராணுவ முகாமுக்கு அருகே சுற்றியுள்ள பகுதிகளில் ஈடுப்பட்டு வருகின்றனா்.

பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள படையினருக்கு தேவையான போர் இயந்திரங்கள் 2 ஆவது இயந்திர காலாட் படைப்பிரிவினரால்  ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. திட்டமிட்டப்பட்ட இப் பயிற்சிக்காக  படையினரை நீர்மற்றும் நிலங்களில்  தரையிரக்கி மீண்டும்  பயிற்சிக்களை மேற்கொள்ளுதலாகும்

இப் பயிற்சியானது கடற்படை மற்றும் தரைப்படையினர்  ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தை கடலில் இருந்து எதிரியை தாக்குதவதற்கு ஏற்ற வகையில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கமைவாக,இராணுவ செயப்பாட்டு பயிற்சியின் கட்டளை அதிகாரி, மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, அவர்கள் திங்கள் கிழமை 04 ஆம் திகதி அன்று இராணுவ தளபதி,லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக, அவர்களுக்கு தொலைபேசிவீடியோமூலம் தொடர்பு கொண்டு பயிற்சி சம்மந்தமாகவிபரங்களை சுருக்கமாக விளக்கினார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *