இலங்கை பிரதான செய்திகள்

வட மாகாணம் கல்வியில் பின்னோக்கி நிற்பதற்கான காரணங்களை தேடிப்பார்க்க வேண்டும் – ஸ்கந்தவோராய கல்லூரியின் முன்னாள் அதிபரின் திருவுருவ சிலையினை திறந்து வைத்த ஆளுநர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுன்னாகம் ஸ்கந்தவோராய கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியம் அவர்களின் திருவுருவ சிலையினை வட மாகாண ஆளுநர் றெயினோல் கூரே   இன்று(07.09.217) திறந்து வைத்தார்.  பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட குறித்த சிலையினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்றயதினம் நடைபெற்றது. இதில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் மற்றும் பாடசாலை அதிபர் மாணவர்கள் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமரர் சிவசுப்பிர மணியம் அவர்களின் குடும்பத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய ஆளுநர்

இலங்கை வரலாற்றில் கல்வியில் முன்னிலையில் இருந்த வடக்கு மாகாணம் இன்று பின்னோக்கு நிற்பதற்கான காரணங்களை நாம் அனைவரும் ஒன்றாக தேடிப்பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.  வெளிச்சம் இன்றி, கட்டிடங்கள் இன்றி, நல்ல ஏனைய வசதிகள் இன்றி நல்ல பேறுகளை பெற்று கல்வியில் உயர்ந்து உயர் பதவிகளில் இடம்பிடித்த தமிழ் மக்கள் இன்று கல்வியில் பின்தள்ளப்பட்டிருக்கின்றார்கள். மாணவர்களித்திலும் பெற்றோர்கள் இடத்திலும் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். உங்கள் அனைவரினதும் விடுதலை கல்வியிலேயே தங்கியிருக்கின்றது. கல்வியில் உயர்வடைந்தால் மட்டுமே பல சாதனைகளை நிறைவேற்ற முடியும்.

வெள்ளைக்காரர்கள் எமது நாட்டை ஆண்டபோதும் வடக்கு மாகாணத்திற்கு அபிவிருத்திகள் எதனையும் பெரிதாக செய்துவிடவில்லை. மலையகப் பகுதிகளிலும் தெற்கிலும் பல அபிவிருத்திகளை அவர்கள் செய்தார்கள். வீதிகளை அமைத்தார்கள், தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள், தேயிலை இறப்பர் தோட்டங்களை உருவாக்கினார்கள் ஆனால் இங்கு எதனையும் செய்யவில்லை.

அதேபோன்று தற்போது இங்கு இருபவர்கள் எதனையும் செய்யவில்லை. திக்கம் வடிசாலைகளை மீள உருவாக்கவில்லை, சீமெந்து தொழிற்சாலையினை மீள ஆரம்பிக்கவில்லை, பால் தொழிற்சாலைகள் மற்றும் எத்தனையோ தொழிற்சாலைகளை மீள உருவாக்கவில்லை. அதனை உருவாக்கி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கவும் இல்லை.

சிவசுப்பிரமணியம் ஐயா இந்த பாடசாலைக்கு இந்த மாணவர்களின் கல்விக்கு தனது முழு சக்தியையும் வழங்கியிருக்கின்றார். அவரை போன்ற ஆசிரியர்கள் அந்த காலத்தில் இருந்ததன் காரணமாகத் தான் வடக்கு மாகாண தமிழ் மக்கள் கல்வியில் உயர்வடைந்தார்கள். அவரைப்போல் தற்போது இருக்கின்ற ஆசியரிகளும் செயற்பட வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

 

1 Comment

Click here to post a comment

Leave a Reply

  • வட மாகாணம் கல்வியில் பின்னோக்கி நிற்பதற்க்கான காரணங்களை கண்டுபிடிக்க வேண்டுமாம் — சிங்கள கூரே, கேட்கின்ற கேணையர்கள் காட்டி கொடுப்பு தமிழனாய் இருந்தால் சிங்கள எருமை மாடுகள் ஏரோப்பிளேன் ஓட்டி காட்டியே தீரும் , தரப்படுத்தலிலே ஆரம்பித்த தமிழர்களுடைய கல்வி வீழ்ச்சிக்கு காரணம் யார் என்று தெரியாத? பாடசாலைகளின் மீது சிங்கள விமானப் படை நடத்திய குண்டுத்தாக்குதலில் எத்தனை பிள்ளைகளை பெற்றோர்கள் பறி கொடுத்தார்கள் என்று தெரியாத ? தாய் தந்தையரை இழந்து அனாதைகளாக பஞ்சம் பட்டினியில் இருந்த பிள்ளைகளுக்கு யார்காரணம் உனது சிங்கள இன வெறிக்கூட்டம் என்று தெரியாமலா இந்த நாடகமாடுகின்றாய் , இதற்க்கு பின்பும் தமிழர்களுடைய கல்வி வீழ்ச்சிக்கு காரணங்களை கண்டு பிடிக்க போகின்றாராம், ஜயா கூரே தங்கள் மீது எந்த தவறும் இல்லை உனது சிங்கள இனம் இனப்படு கொலைகார கூட்டம் என்று தெரிந்தும் அவங்களுக்காக வக்காலத்து வாங்குகின்றாய் அதை பாராட்டியே தீரவேண்டும் , தமிழனத்தை கொன்று குவித்த கொலைகார கூட்டத்தை சேர்ந்தவரை அழைத்து இந்நிகழ்ச்சியை நடத்திய மானம் கெட்ட பிறப்புக்களும் எம் மத்தியிலே வாழ்ந்து கொண்டிருப்பது தான் கேவலம், ராஜன்.